தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் குட்டி விமானங்கள் பறக்க தடை + "||" + Independence Day 2020: Delhi Police Bans Flying Aerial Objects Till August 15

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் குட்டி விமானங்கள் பறக்க தடை

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் குட்டி விமானங்கள் பறக்க தடை
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.


15-ந் தேதி காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். அந்த விழாவுக்கு குறைந்த அளவு பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுதந்திர தினத்தை யொட்டி சமூக விரோதிகள், கிரிமினல்கள் அல்லது பயங்கரவாதிகளால் பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுர்களுக்கும், முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாரா கிளைடர், ஆளில்லா குட்டி விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானம், வெப்ப காற்று பலூன் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் ஜூலை 31-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை 16 நாட்கள் டெல்லி வான்வெளி பகுதியில் அவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடையை மீறி அவற்றை பறக்கவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவின் நகல் போலீஸ் நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.