உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் பிரதமர் கே.பி.ஒளி தவறு இழைத்து விட்டார் நேபாள ஆளுங்கட்சி குற்றச்சாட்டு + "||" + KP Oli's 'undiplomatic, irritating' comments against India were a mistake, says Nepal's ruling party

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் பிரதமர் கே.பி.ஒளி தவறு இழைத்து விட்டார் நேபாள ஆளுங்கட்சி குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் பிரதமர் கே.பி.ஒளி தவறு இழைத்து விட்டார் நேபாள ஆளுங்கட்சி குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் பிரதமர் கே.பி.ஒளி தவறு இழைத்து விட்டார் என்று நேபாள ஆளுங்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
காட்மாண்டு,

இந்தியாவின் காலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து நேபாளம் சமீபத்தில் புதிய வரைபடம் தயாரித்தது. இதனால் இந்தியா-நேபாளம் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நேபாள பிரதமர் கே.பி.ஒளி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை கூறி வருகிறார்.


குறிப்பாக ராமபிரான் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என அவர் கூறியிருந்தது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது இந்திய விரோத போக்குக்கு ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில் நேபாள பிரதமரின் இதுபோன்ற எரிச்சல் ஏற்படுத்தும் இந்திய விரோத கருத்துகளால் அவர் தவறு இழைத்து விட்டதாக ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான நாராயண்காஜி ஸ்ரே ஷ்தா கூறுகையில், ‘இந்தியா தொடர்பாக 3 மிகப்பெரிய தவறுகளை பிரதமர் கே.பி.ஒளி செய்துள்ளார். முதலாவது இந்தியாவின் சின்னமான சத்யமேவ ஜெயதேவை குறித்து எரிச்சலூட்டும் விதத்தில் பேசியது. இரண்டாவது தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயல்வதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியது. 3-வது ராமர் பிறந்த அயோத்திக்கு உரிமை கொண்டாடியது’ என தெரிவித்தார்.

இந்த கருத்துகள் இருதரப்பு உறவுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.