தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை: டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை + "||" + Delhi: Devotees arrive at Jama Masjid to offer prayers

பக்ரீத் பண்டிகை: டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: டெல்லி ஜும்மா மசூதியில்   இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர்.
புதுடெல்லி,

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜும்மா மசூதியில்  இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியுடன் சிறப்புத்தொழுகை நடத்தினர். ஒருவொருக்கொருவர் பக்ரீத் பண்டிகை திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

முன்னதாக,  மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பக்ரீத் பண்டிகை சமூக இடைவெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத்தொழுகை
புதுச்சேரியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சமூக இடை வெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
2. பக்ரீத் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
3. இன்று பக்ரீத் பண்டிகைகவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.