உலக செய்திகள்

அமெரிக்காவில் நடு வானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 7 பேர் பலி + "||" + State lawmaker and local pilot among 7 killed in midair collision over Alaska’s Kenai Peninsula

அமெரிக்காவில் நடு வானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 7 பேர் பலி

அமெரிக்காவில் நடு வானில்  சிறிய ரக விமானங்கள் மோதல்:  7 பேர் பலி
அமெரிக்காவில் நடு வானில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் 7 பேர் பலியாகினர்.
அலாஸ்கா,

அமெரிக்காவில்  அலாஸ்கா மாகாணத்தில்  2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா விமான நிலையம் அருகே நடு வானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோய் உயிரிழந்தார்.  

இந்த விமானத்தை அவரே தனியாக ஒட்டி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7  பேர் பலியாகியுள்ளனர். இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
2. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
3. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது
4. ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கண்டனம்
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.