உலக செய்திகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா + "||" + China reports 127 new coronavirus cases, highest since March 5

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
சீனாவில் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்,

உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து வரும் கொரோனா முதன் முதலில் சீனாவின் உகான் நகரில்தான் கண்டறியப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் உஷாரான சீனா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

உகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் நகரை முழுவதுமாக முடக்கியது. சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், உகான் நகரில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து விட்டதாக சீனா பெருமிதப்பட்டது.

ஆனாலும், சீனாவில் அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது.  இந்த நிலையில், சீனாவின் உய்குர் இன மக்கள் அதிகம் வசிக்க்கும் பகுதியான ஜின் ஜியாங் மாகாணத்தில்,  கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
4. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,218 பேருக்கு கொரோனா தொற்று
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது
5. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.