தேசிய செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஜெகன் மொகன் ரெட்டி அதிரடி + "||" + Andhra Pradesh Govt to Give Plasma Donors Rs 5,000 as Incentive

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஜெகன் மொகன் ரெட்டி அதிரடி

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஜெகன் மொகன் ரெட்டி அதிரடி
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மொகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஐதராபாத்,

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மொகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 63,864 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 1,349 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.