தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ; தேர்தல் கமிஷனுக்கு பஸ்வான் கட்சி கடிதம் + "||" + Defer Bihar Polls, Nitish Kumar Ally Chirag Paswan Writes To Election Body Over Covid

பீகார் சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ; தேர்தல் கமிஷனுக்கு பஸ்வான் கட்சி கடிதம்

பீகார் சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ; தேர்தல் கமிஷனுக்கு பஸ்வான் கட்சி கடிதம்
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணியை சேர்ந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமி ஷனுக்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா, அக்டோபர்-நவம்பர் மாதங்களில்தான் இன்னும் தீவிரமடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், வெள்ள பாதிப்பை தணிப்பதிலும்தான் நமது கவனத்தை திருப்ப வேண்டும். தேர்தல் நடத்துவதில் அல்ல.

பீகாரில் ஏற்கனவே கொரோனாவுக்கு 280 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் தேர்தல் நடத்துவது, திட்டமிட்டு மக்களை மரணத்தை நோக்கி தள்ளுவது போலாகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.