மாநில செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affected another 212 people in Vellore district

வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 212 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,180 ஆக உயர்ந்துள்ளது. 

குணமடைந்தோர்- 5033, உயிரிழப்பு- 61, சிகிச்சை பெறுவோர்- 1086