தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது - பிரியங்காந்தி குற்றச்சாட்டு + "||" + PRIYANKA GANDHI’S BIG ATTACK ON YOGI GOVERNMENT OVER THE LAWYER’S MURDER CASE IN BULANDSHAHR

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது - பிரியங்காந்தி குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது - பிரியங்காந்தி குற்றச்சாட்டு
உத்தர பிரதேசதில் கொரோனாவும், குற்றமும் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் என்ற வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்  அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.


மேலும் அந்த பகுதியில் ட்ரோன்களை விட்டு வழக்கறிஞரின் உடல் தேடபட்டு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. யார் குற்றவாளிகள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவில்,

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது.  குற்றமும் கொரோனாவும் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர் கடத்தப்பட்டு 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கான்பூர், கோரக்பூ, புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம் ஒழுங்கு மந்தமாக  செயல்படுகிறது. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப் போகிறது என பதிவிட்டுள்ளார்.