மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை + "||" + Higher fees for corona treatment Action on private hospital

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்:  தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கபட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடு திரும்பும் போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.


பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வழிக்காட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலன தனியார் மருத்துவமனைக்கள் பின்பற்றவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு நோயாளி ஒருவரிடம் இருந்து 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழக சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.