மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு + "||" + Full Lockdown observed tommorrow in TN

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7-வது கட்டமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆகஸ்ட் மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை  இன்றே  வாங்க கடை வீதிகளில் குவிந்தனர்.  சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூடினர். இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு தினமான நாளை, ,மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி கடை, மளிகை கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்; வாகனங்கள் எதுவும் இயங்காது.மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு ஊரடங்கிற்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ந் தேதியில் இருந்து தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. தமிழகத்தில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் பலி - இதுவரையில் 4,461 பேர் சாவு
தமிழகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 4 ஆயிரத்து 461 பேர் இறந்துள்ளனர்.
3. தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.