மாநில செய்திகள்

உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறை - மத்திய அரசு வெளியீடு + "||" + New rule for domestic air travelers

உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறை - மத்திய அரசு வெளியீடு

உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறை - மத்திய அரசு வெளியீடு
ஊரடங்கு தளர்வையடுத்து உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

புதிய விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியம், குஜராத், டெல்லியில் இருந்து  தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் விமான பயணிகள் தங்களை கட்டாயமாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.