மாநில செய்திகள்

சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு + "||" + Extension of 144 restraining orders in Chennai - Order of Commissioner of Police Maheshkumar Agarwal

சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு
சென்னையில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் இதுவரை 99,794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் படி இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் போடப்பட்ட 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை தொடருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. கொரோனா இருக்கிறதா? என பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
3. உணவகங்களை 5-ந் தேதி முதல் திறக்கலாம் மராட்டியத்திற்குள் ரெயில்களை இயக்க அனுமதி அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது
மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவை 31-ந் தேதி வரை நீட்டித்து உள்ள அரசு புதிய தளர்வுகளை அறிவித்து உள்ளது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் அயனாவரம், மணலி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
5. சென்னையில் என்.ஐ.ஏ. கிளை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...