மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of heavy rain in 7 districts of Tamil Nadu: Meteorological Center

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் இன்று, நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
2. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 110 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு 100-ஐ தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 31 மாவட்டங்களில் 110 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
3. வருகிற 10-ந் தேதி முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ந் தேதியில் இருந்து தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் பலி - இதுவரையில் 4,461 பேர் சாவு
தமிழகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 4 ஆயிரத்து 461 பேர் இறந்துள்ளனர்.
5. தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.