உலக செய்திகள்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Brazil registers 52,383 coronavirus cases, 1,212 deaths in 24 hours

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 52,383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 62 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 1,212 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 92,475 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கொரோனா பாதிப்புபில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 18,84,051 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 89 ஆயிரத்து 679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 28 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,55,920 ஆக உயர்வு
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23,55,920 ஆக உயர்ந்துள்ளது.
4. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது.