தேசிய செய்திகள்

கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Kerala, 1,129 people were confirmed with corona infection today

கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநில அரசு எடுத்து வரும் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால், கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக குறைந்த அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.


அவர் வெளியிட்ட அறிவிப்பில் கேரளாவில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 89 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 114 பேர் ஆவர்.

இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,862 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 13,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 1,43,996 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
5. கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.