தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் மரணம் + "||" + Parliamentary Upper House MP Amar Singh dies of poor health

நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் மரணம்

நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் மரணம்
நாடாளுமன்ற மேலவை எம்.பி. அமர் சிங் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்துள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமர்சிங்.  அக்கட்சியின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய அவரை, கட்சி தலைமை பின்னர் கட்சியிலிருந்தே நீக்கியது.  ஆனால், கடந்த 2016ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் அவர் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யானார்.  இதற்கு, முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உள்பட அக்கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்பின்னர் அவர் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.  கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மரணம் அடைந்துள்ளார்.  அவருக்கு வயது 64.

அமர் சிங்கிற்கு, பங்கஜ குமாரி சிங் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி உடல்நல குறைவால் காலமானார்.
2. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் ராஜினாமா
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
3. பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் இன்று காலமானார்.