தேசிய செய்திகள்

கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி + "||" + Do not hide corona symptoms; Former Andhra minister giving advice died

கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி

கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ஆந்திர பிரதேச முன்னாள் மந்திரி மாணிக்கயாள ராவ் கொரோனா பாதிப்புக்கு இன்று பலியாகி உள்ளார்.
ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முதல் மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்கயாள ராவ் (வயது 59).  பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இவருக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு அறியப்பட்டது.

இதனால் எலூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  கார் பயணத்தில் கொரோனா பாதிப்பு உடைய நண்பர் ஒருவரிடம் இருந்து தனக்கு பாதிப்பு வந்தது என வீடியோ ஒன்றில் கூறிய அவர், கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை மறைக்காதீர்கள்.  நமது தவறான நடவடிக்கையால் வரும் வியாதி அல்ல அது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஏறக்குறைய ஒரு மாதம் வரை சிகிச்சை பெற்று வந்த அவர் தீவிர சுவாச பாதிப்பிற்கு ஆளானார்.  இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

அவரது இறுதி சடங்குகளை அரசு மரியாதையுடன், கொரோனா பாதித்தோருக்கான விதிகளுடன் மேற்கொள்ள முதல் மந்திரி ஜெகன் மோகன் உத்தரவிட்டு உள்ளார்.  இதன்படி அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நாட்டில் கடந்த 6 நாட்களில் 3 லட்சம் அதிகரித்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கடந்த 3ந்தேதி முதல் இன்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து உள்ளது.
3. தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன; முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.