தேசிய செய்திகள்

உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு + "||" + Federal government decides to export domestic ventilators

உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு

உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு
உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்தாலும், இறப்புவீதம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இது வென்டிலேட்டரில் வைக்கப்படுகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையே காட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் 0.22 சதவீத நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டரின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவை அதிகரித்ததால், கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகை வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தேவை குறைந்த நிலையில் வென்டிலேட்டர்களை இனி ஏற்றுமதி செய்யலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
3. பீகார் தேர்தல்; 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம் முடிவு
பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
4. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பு எதிரொலி; 10ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய ஆந்திர பிரதேச அரசு முடிவு
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக 10ம் வகுப்புக்கான பொது தேர்வை நடத்த வேண்டாம் என மாநில அரசு முடிவு செய்துள்ளது.