தேசிய செய்திகள்

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த புதிய விதிகள் அறிவிப்பு + "||" + CISF issues new social media rules, asks 1.62 lakh personnel to avoid criticising govt

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த புதிய விதிகள் அறிவிப்பு

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த புதிய விதிகள் அறிவிப்பு
சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த புதிய வழிகாட்டுதல்களை சி.ஐ.எஸ்.எப். தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழிலக பதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்), 1 லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் 63 விமான நிலையங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களால் தேசிய பாதுகாப்புக்கும் படை வீரர்களின் பொது ஒழுக்கத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள சி.ஐ.எஸ்.எப். தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்கள் கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின் படி படை வீரர்கள் அனைவரும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் உள்ள தங்களின் கணக்கு விவரங்களை சி.ஐ.எஸ்.எப்.பிடம் வெளிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படை வீரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது புதிய கணக்கு ஒன்றை உருவாக்கினால் அதை துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் படைவீரர்கள் புனைபெயர்களில் சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகிக்கக் கூடாது; எந்த ஒரு வி ஷயத்திலும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட கூடாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.