தேசிய செய்திகள்

காதி வாரியம் சார்பில் பட்டு முககவசம் அறிமுகம் + "||" + KVIC aims to tap foreign market in festival season with Khadi gift box of silk masks, priced at Rs 500

காதி வாரியம் சார்பில் பட்டு முககவசம் அறிமுகம்

காதி வாரியம் சார்பில் பட்டு முககவசம் அறிமுகம்
மத்திய அரசின் காதி வாரியம் பட்டு மூலம் தயாரிக்கப்பட்ட முககவசத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி,

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி அனைவரும் முககவசம் அணிவது தான் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த முககவசம் தற்போது விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில் விற்பனையாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.


இந்த நிலையில் மத்திய அரசின் காதி வாரியம் பட்டு மூலம் தயாரிக்கப்பட்ட முககவசத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 5 பட்டு முககவசம் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.500 விலையுள்ள இந்த பரிசு பெட்டகத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், இந்த இக்கட்டான நேரத்தில் தரமான முககவசம் குறைந்த விலையில் கிடைக்க காதி நல வாரியம் பட்டு முககவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விழாக்காலத்தில் பரிசளிக்க விரும்புவோர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்த பட்டு முககவச பரிசு பெட்டகம் டெல்லியில் உள்ள காதி வாரிய விற்பனை மையங்களில் விற்கப்படுகிறது.