தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு + "||" + India's COVID tally crosses 17 lakh mark with 54,736 positive cases & 853 deaths in the last 24 hours.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு

இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 736- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவலை விரைவாக கண்டறியும் வகையில், பரிசோதனைகளையும் இந்தியா அதிகரித்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 853-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,724 ஆக உள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,364 ஆக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,45,630-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று
ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ’ஸ்டெர்லைட் பவர்’ உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம்
இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ஸ்டெர்லைட் பவர் உள்பட23 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது.
5. மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது.