தேசிய செய்திகள்

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு போனில் அழைப்பு + "||" + LK Advani, Joshi to get invites on phone for Ayodhya event

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு போனில் அழைப்பு

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா:  அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு போனில் அழைப்பு
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்அ அத்வானி, ஜோஷிக்கு, டெலிபோனில் அழைப்பு விடுக்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள புண்ணிய தலங்களில் இருந்து மண்ணும், புனித நீரும் கொண்டு வரப்படுகிறது.


பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமராக மோடி பதவி ஏற்றபின் அவர் ராமஜென்மபூமிக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும்.

பூமி பூஜையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் இந்து மத துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் அத்வானி, ஜோஷிக்கு, டெலிபோனில் அழைப்பு விடுக்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம் - அமித்ஷா புகழாரம்
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.