தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை + "||" + India, China To Hold Fifth Round Of Commander-Level Talks Today

லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை

லடாக் எல்லை விவகாரம்:   இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று  பேச்சுவார்த்தை
லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

 லடாக் எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம், கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது.

இதைதொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 5-வது கட்டமாக இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்களும் பங்கேற்கின்றனர். 

கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று நடைபெற பேச்சுவார்த்தை உள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
2. ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்
ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்.
3. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
4. விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-மின்சார ரயில்கள் ரத்து
மும்பையில் இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?