தேசிய செய்திகள்

இஸ்ரோவில் தனியாருக்கு வாய்ப்பு 31-ந்தேதி வரை கால அவகாசம் + "||" + ISRO to allow private sector to set up own launchpad at Sriharikota

இஸ்ரோவில் தனியாருக்கு வாய்ப்பு 31-ந்தேதி வரை கால அவகாசம்

இஸ்ரோவில் தனியாருக்கு வாய்ப்பு 31-ந்தேதி வரை கால அவகாசம்
இந்திய விண்வெளித்துறையில் தனியாருக்கும் வாய்ப்பளிக்க இஸ்ரோ முன் வந்து உள்ளது.
பெங்களூரு,

இந்திய விண்வெளித்துறையில் தனியாருக்கும் வாய்ப்பளிக்க இஸ்ரோ முன் வந்து உள்ளது. முழுமையாக ராக்கெட் வடிவமைப்பு மற்றும் செயற்கைகோள்கள் வடிவமைப்பு, ஏவுதல் உள்ளிட்ட பணிகளிலும் தனியாருக்கும் வாய்ப்பு அளிக்கும் பணியில் இஸ்ரோ இறங்கி உள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-

இந்திய விண்வெளித்துறைக்கு தேவையான தளவாடங்களை மட்டுமே தனியார் தயாரித்து அளித்து வருகின்றனர். வரும் காலங்களில் விண்வெளி திட்டங்களிலும் தனியாருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போது மனித விண்வெளிப் பயணத் திட்டத்திலும் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்காக அவர்கள் குறித்த தகவல்களை முன்பதிவு செய்ய கடந்த மாதம் 31-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருவதால் மீண்டும் வருகிற 31-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.