தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு + "||" + Uttar Pradesh’s Kamla Rani, minister in Yogi Adityanath cabinet, dies of Covid-19

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி  உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் கேபினட் மந்திரி உயிரிழந்தார்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்நயாத் தலைமையிலான மந்திரி சபையில் தொழில்துறை கல்வி  அமைச்சராக இருந்தவர் கமல் ராணி வருண். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்தே காணப்பட்டது. நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் கடும் முயற்சிகள் எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று கமல் ராணி வருண் உயிரிழந்தார். 

மந்திரி கமல் ராணி வருண் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
2. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
4. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.