மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை முதல் மேலும் வலுவடையும் தென்மேற்கு பருவமழை + "||" + The southwest monsoon will intensify further from tomorrow

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை முதல் மேலும் வலுவடையும் தென்மேற்கு பருவமழை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை முதல் மேலும் வலுவடையும் தென்மேற்கு பருவமழை
ஆக.4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.