தேசிய செய்திகள்

அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Coronavirus negative, young cops to look at PM Modi’s security in Ayodhya, another 3,500 cops to reach town

அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அயோத்தி,

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட உள்ள  உத்தரப்பிரதேச மாநில கமாண்டோ போலீசார் 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் மேடையில் 4 பேர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
2. பல வருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி
சராயு நதிக்கரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று பிரதமர் பேசினார்.
3. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
4. குழந்தை ராமர் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார் பிரதமர் மோடி
அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை பிரதமர் மோடி நட்டு வைத்தார்.
5. அயோத்தியில் உள்ள ஹனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.