மாநில செய்திகள்

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் + "||" + MK Stalin Urges Tn goverment Rejetct NEP

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின்
புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்  கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது: 

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார்.

கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும் .  கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்க‌க் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும்.  புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2. ‘கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்’ எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.