தேசிய செய்திகள்

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் + "||" + Congress President Sonia Gandhi, who was admitted to Sir Ganga Ram Hospital on July 30, has been discharged

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (வயது 73) கடந்த 30-ம் தேதி  இரவு 7 மணி அளவில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த 30-ம் தேதி  டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி டிஸ்சார்ஜ் குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறியதாவது:-

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல் நிலை சீராக உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.