மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ - 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம் + "||" + Sealed for only 54 seats in Chennai Corporation Removal of restricted areas in 10 zones

சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ - 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்

சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ - 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்
சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று அதிகம் உள்ள இடங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையடுத்து அந்த இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.

தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீங்கி உள்ளது.

தற்போது திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஒரு இடமும், அம்பத்தூரில் 17 இடங்களும், அண்ணாநகரில் 16 பகுதிகள், தேனாம்பேட்டையில் 3 பகுதிகள், கோடம்பாக்கத்தில் 18 பகுதிகள் என மொத்தம் 54 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்பு; 16,524 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் இதில் 16,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் : மாநகராட்சி வெளியீடு
கொரோனா நோய் தொடர்பான பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
4. அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5. சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கொரோனா நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.