தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர் + "||" + New education policy will not make any difference in Pondicherry - Pondicherry Chief Minister

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர்

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர்
புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, 

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்கள்கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் சித்த மருத்துவ சார்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத கல்வி கொள்கை, புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டுத்தான் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்புள்ள தற்போதைய சூழலில் மாணவர் கல்வி பயில மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு மாநில அரசுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல்
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
2. புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
மும்மொழி கொள்கையைக் கொண்ட புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. புதிய கல்வி கொள்கையில் நாட்டின் ஜி.டி.பி.யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது - கமல்ஹாசன் கருத்து
புதிய கல்வி கொள்கையில் நாட்டின் மொத்த ஜி.டி.பி.யின் மதிப்பில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.