மாநில செய்திகள்

ராமர் கோயில் பூமி பூஜை: "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு + "||" + Ram Temple Bhoomi Puja We are about to see an event of historical significance Vice President Venkaiah Naidu

ராமர் கோயில் பூமி பூஜை: "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

ராமர் கோயில் பூமி பூஜை: "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ராமர் கோயில் பூமி பூஜை இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக  நாம் காணவிருக்கிறோம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்றும் ராமருக்காக ஒரு கோவிலைக் கட்டுகிறோம் என்பதில் நாங்கள் பாக்கியம் அடைகிறோம். ராமர் கோவிலை மீண்டும் எழுப்புவது கலாச்சார மதிப்பீடுகளை கட்டி எழுப்புவதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்த நிகழ்ச்சி இருக்கும்.

இவ்வாறு அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும் - மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் தகவல்
ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கூறினார்.