தேசிய செய்திகள்

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி + "||" + Andhra Pradesh reported 8,555 new Coronavirus cases in the last 24 hours.State Health Department

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவில் இன்று மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,764 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,474 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 82,886 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 74,404 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
2. சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு; மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ் தகவல்
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
3. மராட்டியத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது: ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.