உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல் + "||" + UK PM Boris Johnson postpones easing of coronavirus lockdown measures in England

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டன்

சீனா உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.92 லட்சத்தை தாண்டியது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் 18,231,535 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,443,844 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,753 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்ங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304,695 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கூறப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போரிஸ் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.ஆனால் அது மக்களுக்கு எளிதாக புரியும் படி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதாவது, பள்ளிகள் திறக்கப்படுவது, பப்கள் மூடப்படுவது போன்ற புதிய விதிகளால், இங்கிலாந்தின் வடக்கில் இருக்கும் லட்ச கணக்கான மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

இதில், ஒரு பலன் இருக்கிறதா என்று நிபுணர்கள் கூட கேள்வி எழுப்புகிறார்கள்.இந்நிலையில் தான் போரிஸ் சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து நாட்டின் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதனால் உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக உறுதியான தகவல் கிடைக்கும் பட்சத்தில் லண்டன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்திருந்தார்

இதையடுத்து தற்போது போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா வைரஸால், இரண்டாவது அலை இருக்குமானால், இங்கிலாந்தின் புதிய ஊரடங்கு நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக இந்த திட்டங்கள் மதிப்பிடப்படுகின்றன.மேலும், பரிசீலிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் வயதானவர்களை மீண்டும் ஒரு முறை பாதுகாக்கும்படி கேட்பது, லண்டனில் ஊரடங்கு என்றால் அது இரண்டாவது அலையாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் என்று கடந்த மார்ச் முதல் அடையாளம் காணப்பட்ட நபர்களின் வயது மதிப்பிடப்படுவதுடன், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கேடயம் திட்டத்தில் பங்கேற்குமாறு கேட்கப்படுவார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் லீசெஸ்டர் மற்றும் இங்கிலாந்தின் வடமேற்கின் சில பகுதிகளில் விதிக்கப்பட்ட உள்ளூர் ஊரடங்குகளில் இருந்த கொள்கைகளைப் போன்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...