தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்? + "||" + Coronavirus Vaccine:who is the first person

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
புதுடெல்லி
 
சீனா உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.92 லட்சத்தை தாண்டியது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் 18,231,535 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,443,844 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,753 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி யாருக்கு கிடைக்க வேண்டும்? இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்திலும் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடந்த வாரம் வியாழக்கிழமை தெரிவித்தார். ஆனால் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று அவர் கூறி உள்ளார்.

உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று அமெரிக்காவின் மிகப்பெரிய வைரஸ் நிபுணர் அந்தோனி பாசி நம்புகிறார்.  அவர் கூறுகையில், 'இந்தியாவின் உற்பத்தி திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அனைத்து தடுப்பூசி சோதனைகளும் ஒழுங்குமுறை தரத்தின்படி இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் கூறி உள்ளார்.

உலகின் பல பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்கின்றன. இதுபோன்ற 6 நிறுவனங்களுடன் 100 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகளில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கோவாக்ஸ் ஒப்பந்தத்திலிருந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
2. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
4. ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..?
ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
5. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...