உலக செய்திகள்

ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Iran Says 2,598 COVID-19 Patients Registered in 24 Hours

ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,82,83,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,93,783 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ஈரான் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,12,035 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 215 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 17,405 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றில் இதுவரை 2,70,228 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 24,402 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 11வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,15,776 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,33,677 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,22,112 பேர்) உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் முகாம் சவுதி அரேபியாவில் அழிப்பு
ஈரானில் புரட்சிகர காவலர்களிடமிருந்து பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் முகாம் சவுதி அரேபியாவில் அழிக்கப்பட்டது.
2. டெல்லியில் இன்று மேலும் 2,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பத்து மடங்கு அதிகமாக உள்ளது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பத்து மடங்கு அதிகமாகும் என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு தெரிவித்து உள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது-மைக் பாம்பியோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...