உலக செய்திகள்

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு + "||" + The number of corona victims in Russia has risen to 8,61,423

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,84,75,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,98,220 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனாவின் தாக்கம் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 144 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,351 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் பேர் 7,878 குணமடைந்த நிலையில், இதுவரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,85,601 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,62,513 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,51,665 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,61,821 பேர்) உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்ந்துள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. இதுவரை 77,104 முதியவர்கள் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது
தமிழகத்தில் இதுவரை 77,104 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 330 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 330 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது; பரிசோதனை எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது. பரிசோதனை எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...