மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலர் + "||" + In Thoothukudi district Corona infection has gradually begun to decline Secretary of Health

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மிகவும் குறைவு தான். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 0.7 சதவீதமாகவே இருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிய வேண்டும். அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 70 ஆயிரமாக இருந்த படுக்கை வசதிகள், தற்போது 1.18 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தொற்றின் தாக்கத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது படுக்கை வசதி இல்லாமல், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.75 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளது. தனியாக கட்டிட வசதியுடன் 50 படுக்கைக்கு மேல் இருந்தால் அங்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் 104 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...