உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி: ரஷியா வழிகாட்டுதல்கள் - ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் -உலக சுகாதார அமைப்பு + "||" + Covid-19 vaccine WHO asks Russia to follow regulations

கொரோனா தடுப்பூசி: ரஷியா வழிகாட்டுதல்கள் - ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் -உலக சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி: ரஷியா வழிகாட்டுதல்கள் - ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் -உலக சுகாதார அமைப்பு
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ரஷியா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
ஜெனீவா

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம் என ரஷிய சுகாதார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் சந்தையில் இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்திற்குள் வெகுஜன தடுப்பூசிகள் தொடங்கும் என்று  ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாட்டில் ரஷியா விரைந்து செல்வதை எச்சரித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறியதாவது:-

சில நேரங்களில் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஏதாவது கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர், இது நிச்சயமாக ஒரு சிறந்த செய்தி. ஆனால் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும்  வேலை செய்வதற்கும் இடையில், ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

தடுப்பூசிக்கு என நிறுவப்பட்ட நடைமுறைகள் உள்ளன மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன.தடுப்பூசி நிச்சயமாக, மக்கள் பயன்பாட்டுக்கு உரிமம் பெறுவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகள் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வமாக ஏதாவது இருந்தால், ஐரோப்பிய அலுவலகத்தில் உள்ள எங்கள் சகாக்கள் நிச்சயமாக இதைக் கவனிப்பார்கள் பொதுவாக, ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பான வளர்ச்சியை எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், விதிகள் உள்ளன. இவை நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...