உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதிர்ச்சி தகவல் + "||" + Nearly 10 Million Infected With Coronavirus In Afghanistan: Officials

ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
காபூல்

ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக சுமார் 36,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1,200 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, ஆனால் வறுமை மற்றும் பல தசாப்த கால உள்ளூர் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சுகாதார அமைப்பு காரணமாக பாதிப்புகள் பெருமளவில் குறைவாக பதிவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில், ஒரு மாதிரி கணக்கெடுப்பில், மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் - அல்லது சுமார் 1 கோடின் மக்கள் - கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நாடு முழுவதும் இருந்து 9,500 பேர் மீது ஆன்டிபாடி பரிசோதனையின் விளைவாக இந்த முடிவுகள் கிடைத்து உள்ளன.

அமைச்சர் அஹ்மத் ஜவாத் உஸ்மானி, பெரும்பாலான பாதிப்புகள் நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தலைநகர் காபூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பாதிப்புகள் அறிகுறியற்றவை என்று நம்பப்படுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
2. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
3. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்
தினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.