உலக செய்திகள்

உலக பிரபலங்கள் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கிங் ஜூம் விசாரணையின் போது ஆபாசபடம், விசாரணையில் தாமதம் + "||" + Porn video, rap music interrupt US court hearing for accused Twitter hacker

உலக பிரபலங்கள் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கிங் ஜூம் விசாரணையின் போது ஆபாசபடம், விசாரணையில் தாமதம்

உலக பிரபலங்கள் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கிங் ஜூம் விசாரணையின் போது ஆபாசபடம், விசாரணையில் தாமதம்
உலக பிரபலங்கள் டுவிட்டர் கணக்குகள் ஹேக்கிங் ஜூம் விசாரணையின் போது ஆபாசபடம் வெளியானதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.
வாஷிங்டன்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் உலகின் மிக முக்கிய புள்ளிகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் கேட்டுப் பதிவுகள் இடப்பட்டன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், உலக பெரும் பணக்காரர்களான வாரன் பபெட், பில் கேட்ஸ், எலான் மாஸ்க், மைக் புளும்பெர்க், நடிகை கிம் காதர்ஷியன் உட்பட 130 பிரபலங்களின் கணக்குகள் இதில் அடங்கும். உபேர், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டன.

இந்த கணக்குகளிலிருந்து போலி பதிவுகளின் மூலம் குறிப்பிட்ட பிட்காயின் விலாசத்திற்கு 1000 டாலர்கள் அனுப்பினால் 2000 டாலர்கள் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. உடனடியாக இவை நீக்கப்பட்டாலும், பிரபலங்களின் இந்தக் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து மீட்க முடியாமல் திணறினர்.பின்னர் அது சரி செய்யப்பட்டது.  இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் அமெரிக்காவை சேர்ந்தவர். மற்றொருவர் பிரிட்டனை சேர்ந்தவர்.

குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க இளைஞரிடம் ஜூம் வழியாக நேற்று நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. 

ஆனால் விசாரனையின் இடையில்  பாட்டு,  கூச்சலிடுதல் மற்றும் ஆபாசப் படங்கள் ஆகியவற்றின் குறுக்கீடுகள் அடிக்கடி நிகழ்ந்தன. இதனால் நீதிபதி கிறிஸ்டோபர் நாஷ் அதை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார். இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. குற்றம் சாட்டபட்டவருக்கு ஜாமீன் 725,000 டாலராக நிர்ணயிக்கப்பட்டது.