தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு + "||" + The recovery rate from corona infections in India has risen to 67.6 per cent

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 537 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 19 லட்சம் என்ற அளவை கடந்தது.  அதற்கு 2 நாட்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அந்த நாளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,509 ஆக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

எனினும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக இருந்தது.  குணமடைந்தோர் விகிதம் 67.19 சதவீதம் ஆக உயர்ந்திருந்தது.  உயிரிழப்பு விகிதம் 2.09 சதவீதம் ஆக இருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இன்றைய தகவலின்படி, குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் ஆனது 67.6 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் ஒவ்வொரு நாளும் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்மட்டம் 61 அடியாக உயர்வு: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்
நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்ததையடுத்து வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உள்ளது; முதல் மந்திரி கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதம் ஆக உள்ளது என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
5. மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60,254 ஆக உயர்வு
மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்ந்து உள்ளது.