உலக செய்திகள்

சந்தேகத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர் + "||" + Husband stabs wife in nose on suspicion

சந்தேகத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்

சந்தேகத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்
ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தில் மனைவியின் மூக்கை கணவர் அறுத்து எறிந்தார்.
காபூல்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிகவும் அதிகம். 87 சதவீதம்  ஆப்கானிஸ்தான்  பெண்கள் உடல் ரீதியான துன்பங்களுக்கோ அல்லது பாலியல் வன்முறைக்கோ ஆளாக்கப்படுகின்றனர், மனதளவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அமைப்பு ஒன்று நடத்திய தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்தது.

கணவனோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு ஆண்கள் கூட பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடுமைகளும் நடக்கின்றன.

காபூலில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சார்கா. படிப்பறிவு இல்லாதவர்.  திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 28 வயதுடைய சார்காவை அவரது கணவர் தினமும் அடிப்பது வழக்கம் தான். ஒருநாள் சந்தேகத்தில் சார்காவின் கணவர் கத்தியை வைத்து சார்காவின் மூக்கை அறுத்துவிட்டார்.

சார்கா சிகிச்சைகாக காபூல் அழைத்து வர, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மிகவும் போராடி உள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உள்ளது.

இதுகுறித்து சாகா கூறும் போது

''நான் என் கணவரிடம்  சொல்லாமல், என் தாய் தந்தை வீட்டிற்கு சென்றது அவருக்கு அவமானமாகிவிட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடித்தார். அவரிடம் துப்பாக்கியும் இருந்தது. ஆனால் அவரின் சட்டை பையில் ஒரு கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்தார். இரத்தம் வழிந்தது. ஆனால் அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்'' என நடந்தவற்றை சார்கா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
2. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.
5. உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.