உலக செய்திகள்

போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி + "||" + GRISLY 'MURDER' Ukrainian rapper’s wife ‘who chopped up dead husband’s corpse’ and kept it in fridge

போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி

போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி
போதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி
மாஸ்கோ

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவர் தனது மனைவி மெரினா குஹாவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்துள்ளார் .

உலகம் முழுவதும் கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள சூழலில் அலெக்சாண்டர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார்.  இதனால் மன அழுத்தம் அடைந்த குஹா கணவனை கொன்றுவிடலாம் என முடிவு செய்து கத்தி, சுத்தியல், ரம்பம் உள்ளிட்டவை கொண்டு கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். தனது 2 வயது குழந்தையின் கண் முன்னே இந்த கொலையை செய்துள்ளார்.

பின்னர் வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்கு கழுவி உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். வீட்டை நன்றாக சுத்தம் செய்து விட்டு வழக்கம் போல் தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் அலெக்சாண்டருக்கு அவரது நண்பர்கள் போன் போட்டுள்ளனர். தொடர்ந்து அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் குஹாவிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போதையில் டார்ச்சர் செய்ததால் தான் கொன்றதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடிபோதையில் மனைவி எரித்து கொலை - கணவர் கைது
அறந்தாங்கி அருகே குடிபோதையில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
2. ரஷியா, ஈரான், சீன கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி; அமெரிக்கா என்ன சொல்கிறது?
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷியா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்த மாதம் மத்தியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.
3. சக்தி வாய்ந்த போர் விமானங்களை நார்வேக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்கா : ரஷியாவுக்கு எச்சரிக்கை
ஆர்டிக் பிராந்திய விவகாரத்தில், ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக, அமெரிக்கா, தனது குண்டுவீசும் போர் விமானங்களை, நார்வேயில் நிலைநிறுத்த உள்ளது.
4. மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி-மாமியார் மீது உருட்டுக்கட்டை தாக்குதல்; டிரைவர் கைது
மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி, மாமியாரை உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி
ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலியாகினர்.