உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு + "||" + New Virus Alert: 7 Dead, 60 Infected in China, Tick Bite is Transmission Route

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
பீஜிங்

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  7.10 லட்சமாக- ஆக  உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1.21 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் ஒரு புதிய வைரஸின் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு மருத்துவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

சீன நாளேடான 'குளோபல் டைம்ஸ்'வெளியிட்டு உள்ள தகவல்படி  ஒருவகை உண்ணி கடித்தால் ஏற்படக்கூடிய புதிய வகை வைரஸ் சீனாவில் உருவாகி வருகிறது. இதுவரை கேள்விப்படாத இந்த வைரசால் ஏற்கனவே குறைந்தது ஏழு பேர் பலியாகி உள்ளனர்மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த வைரசால் த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறியுடன் கடுமையான காய்ச்சல் ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்  பின்னர் கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிஜியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையின் மருத்துவர் ஷெங் ஜிஃபாங், மனிதனுக்கு மனிதனுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. நோயாளிகள் இரத்தம் அல்லது சளி வழியாக மற்றவர்களுக்கு வைரஸ் பரவும். பெரும்பாலும் உண்ணிகடித்தல் முக்கிய பரிமாற்ற வழி என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

டிக் போர்னே வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “இந்த வைரஸ் கொரோனாவைப் போல சவாலாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வைரஸ் உண்ணி, ஈக்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. மேலும் ரத்தம், சளி, இருமல் மூலமும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுகிறது” என்று எச்சரித்துள்ளனர்!


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
2. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, சவாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
3. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
4. செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக
செப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-
5. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!