மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் + "||" + Nellai, Tenkasi, Rs 275 crore projects - Chief Minister Palanisamy started

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 275 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நெல்லை,

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


இதன் பின்னர் வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர். அடுத்ததாக, விவசாய சங்கங்கள்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
நெல்லை, தென்காசியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
2. ஜப்பானில் மர்மமான முறையில் இறந்த நெல்லை என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம்
ஜப்பானில் மர்மமான முறையில் இறந்த நெல்லை என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
3. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
4. நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் - அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க கோரிக்கை
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு வலைவீச்சு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...