தேசிய செய்திகள்

சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம் + "||" + Serum Institute Ties Up With Gates Foundation For 100 Million Vaccine Doses For India, Others

சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்

சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.

பெங்களூரு

கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. 

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, சீரம் நிறுவனம், உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், இங்கிலாடின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, சீரம் நிறுவனம் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனை முடிவுகளை, மத்திய மருந்துகள் தரக் கட்டுப் பாட்டு கழகத்தைச் சேர்ந்த, வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இத்துடன், ஆக்ஸ்போர்டு பல்கலை மேற்கொண்ட, முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, சீரம் நிறுவனம், மனிதர்களிடம் 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  2021 ஆம் ஆண்டளவில் 10 கோடி கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை தயாரிக்க பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கேவி தடுப்பூசி கூட்டணியிலிருந்து 150 மில்லியன் டாலர் நிதியுதவி பெறும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  தெரிவித்துள்ளது.

இது குறித்து, சீரம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது. 

இதில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...