தேசிய செய்திகள்

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு + "||" + Kerala Idukki landslide death toll rises to 28

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் கனமழை காரணமாக, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த தொழிலாளர்கள் பலர் நிலச்சரிவில் சிக்கினர்.


இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 38 பேரின் உடல்களை தேடும் பணி 3 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் 34 வயதான அருண் மகேஸ்வர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கபப்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்
கேரள மாநிலத்தில் தினசரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என அந்த மாநிலத்தின் சுகாதார மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.
2. கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை
கேரளாவில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கேரள மாநிலத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்
கேரள மாநிலத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.