மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 5,994 new people in Tamil Nadu

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் புதிதாக மேலும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 5,974 பேர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேர் உட்பட 5,994 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர்.  அரசு மருத்துவமனைகளில் 85 பேர், தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்தனர்.

தமிழகத்தில் வேறுநோய் பாதிப்பு இல்லாத 16 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,08,108 ல் இருந்து 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது, சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 6,020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,32,618 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 68,170 பேருக்கும், இதுவரை 31,09,708 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 53,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,90,9074லிருந்து 2,96,901 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 68,170 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழகசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு: மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.